ஐ.எஸ் அமைப்பினர் நிகழ்த்திய தாக்குதலில் 35 தாலிபான்கள் பலி என தகவல்

0 2884

ஆப்கானிஸ்தானில், தொடர் குண்டு வெடிப்புகளில் 35 தாலிபான்கள் கொல்லப்பட்டதாக ஐ.எஸ் அமைப்பினர் தெரிவித்தனர்.

தாலிபான்களும், ஐ.எஸ் அமைப்பினரும் சன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்ற போதும் மதம் மற்றும் கொள்கை சார்ந்த முடிவுகளில் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் ஒருவரை ஒருவர் ரத்தக்களரியாக தாக்கி சண்டையிட்டு வருகின்றனர்.

கடந்த இரு நாட்களில், ஜலாலாபாத் நகரின் 4 வெவ்வேறு பகுதிகளில் தாலிபான்கள் சென்ற வாகனங்களை குறி வைத்து குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன.

அமெரிக்க படைகள் ஆப்கனை விட்டு வெளியேறிய பின் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரும் பயங்கரவாத தாக்குதலாக இது கருதப்படுகிறது.

4 குண்டு வெடிப்புகளுக்கும் பொறுப்பேற்றுள்ள ஐ.எஸ் அமைப்பினர் இதில் 35 க்கும் மேற்பட்ட தாலிபான்கள் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் எனத் தங்கள் Telegram Channel-ல் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments