ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

0 2980

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக சார்பில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 இடங்களுக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 14 இடங்களுக்கும் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இடைத்தேர்தல் நடைபெற உள்ள பதவிகளுக்கும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments