இளம் வயதிலேயே சிறந்த குருவாக திகழும் கல்லூரி மாணவி..!

0 2020

சென்னையில் 20 வயதே ஆன கல்லூரி மாணவி, பரதநாட்டிய பயிற்சி பள்ளி தொடங்கி சுமார் 40 பேருக்கு பரதநாட்டியம் கற்றுக் கொடுத்து வருகிறார்.

வேங்கைவாசல் பகுதியை சேர்ந்த சாதனா என்ற அந்த கல்லூரி மாணவி, பிசியோதரபி பயின்று வருகிறார். தனது 5 வயதில் பரதநாட்டியம் கற்க தொடங்கிய சாதனா, 2014 ஆம் ஆண்டு முதன்முதலாக அரங்கேற்றம் செய்துள்ளார்.

இந்த நிலையில், தன் வீட்டிலேயே சாதனா அகாடமி என்ற பெயரில் பரதநாட்டிய பயிற்சி பள்ளி தொடங்கி, சுமார் 40 பேருக்கு அவர் பயிற்சி அளித்து வருகிறார்.

ஒவியங்கள் வரைவதிலும் கைதேர்ந்தவரான சாதனா சிறுவர்களுக்கு ஒவியப்பயிற்சியும் வழங்கி வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments