அடுத்த மாதம் முதல் மீண்டும் உபரி தடுப்பூசி ஏற்றுமதி ; சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவிப்பு

0 1587
அடுத்த மாதம் முதல் மீண்டும் உபரி தடுப்பூசி ஏற்றுமதி ; சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவிப்பு

கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவின் பங்களிப்பை நிறைவேற்ற, நம்மிடம் உபரியாக உள்ள தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், அடுத்த மாதம் முதல் மீண்டும் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி ஏழை மற்றும் நடுத்தர நாடுகளுக்கு, உபரியாக உள்ள தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்படும் என மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். கடந்த ஏப்ரல் இறுதி வரை இந்தியா 6 கோடியே 64 லட்சம் டோஸ் தடுப்பூசியை விற்பனைக்காகவும், இலவசமாகவும் 93 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

தடுப்பூசி ஏற்றுமதிக்கு எந்த தடையும் இல்லாத நிலையில், கொரோனா 2 ஆவது அலை காரணமாக மத்திய அரசு அதன் ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. அத்துடன் அடுத்த மாதம் கூடுதலாக 30 கோடி தடுப்பூசி டோசுகள் உற்பத்தியாகும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். பயாலஜிகல் இ உள்ளிட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இதற்கான உற்பத்தி நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments