சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

0 2007
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே, பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். சரஸ்வதி பாளையத்தில் கோடீஸ்வரன் என்பவருக்கு சொந்தமான அனுமதி பெற்ற பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்த போது, ஒரு அறையில் உராய்வு ஏற்பட்டு திடீரென வெடிவிபத்து நிகழ்ந்தது.

இதில், அந்த குறிப்பிட்ட அறை முழுவதும் தரைமட்டமான நிலையில், உள்ளே சிக்கிக் கொண்ட சின்ன முனியப்பன் என்ற தொழிலாளி உயிரிழந்தார். சம்பவ இடத்தில் ஆய்வு செய்த காவல் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், வழக்கு பதிவு செய்து ஆலை உரிமையாளர் கோடீஸ்வரன் உள்பட 2 பேரை தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments