மறுவிசாரணைக்கு வரும் கொடநாடு கணினி ஆப்பரேட்டர் தினேஷ் தற்கொலை வழக்கு

0 2489
மறுவிசாரணைக்கு வரும் கொடநாடு கணினி ஆப்பரேட்டர் தினேஷ் தற்கொலை வழக்கு

கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றிய கணினி ஆபரேட்டர் தினேஷ் குமார் தற்கொலை வழக்கை, மீண்டும் விசாரிக்க அனுமதி கோரி கோத்தகிரி வட்டாட்சியரிடம் காவல்துறை மனு அளித்துள்ளது.

கொடநாடு எஸ்டேட்டில் பணிபுரிந்த கணினி பொறியாளர் தினேஷ்குமார், கொலை, கொள்ளை சம்பவம் நடந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு தற்கொலை செய்து கொண்டார். இதனை விசாரித்த சோலூர் மட்டம் போலீஸார் தற்கொலை எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

இந்நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து சாட்சியங்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் மறு விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், கணினி பொறியாளர் தினேஸ்குமாரின் தற்கொலை வழக்கிலும் பல்வேறு சந்தேகம் உள்ளதாகவும், அதை மீண்டும் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என காவல்துறை மனு அளித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments