இந்தி திரைப்பட பாடலாசிரியர் ஜாவித் அக்தர் தமக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கங்கனா ரணாவத் எதிர்மனு தாக்கல்

0 2689
இந்தி திரைப்பட பாடலாசிரியர் ஜாவித் அக்தர் தமக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கங்கனா ரணாவத் எதிர்மனு தாக்கல்

இந்தி திரைப்பட பாடலாசிரியர் ஜாவித் அக்தர் தமக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதுடன் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நீதிமன்றத்தில் எதிர்மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்தி நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தை தொடர்ந்து தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய கங்கனா, பாடலாசிரியர் ஜாவித் அக்தர் மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியதாக மும்பை மெட்ரோபொலிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.

இதில் கங்கனா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட எதிர் மனுவில், கங்கனாவையும் அவரது சகோதரி ரங்கோலியையும், ஜாவித் அக்தர் தனது வீட்டுக்கு வரவழைத்து மிரட்டியதாக வழக்கறிஞர் நீதிபதியிடம் முறையிட்டார். விசாரணையின் போது கங்கனா ரணாவத்தும், ஜாவித் அக்தரும் நீதிமன்ற அறையில் நேருக்கு நேராக சந்திக்கும் நிலைமை ஏற்பட்டது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments