பாறைகளை ஜல்லிகளாக உடைக்க 1 கி.மீ. இடைவெளியில் 2 கிரசர் யூனிட்டுகள் அமைக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

0 2258
1 கி.மீ. இடைவெளியில் 2 கிரசர் யூனிட்டுகள் அமைக்க விதிக்கப்பட்ட தடை

பாறைகளை ஜல்லிகளாக உடைக்க, ஒரு கிலோ மீட்டர் இடைவெளிக்குள் 2 கிரசர் யூனிட்டுகள் அமைத்து கொள்ள விதிக்கப்பட்ட தடையை நீக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இரண்டு யூனிட்டுகளுக்கு இடையே குறைந்தபட்சம் ஒரு கிலோ மீட்டர் தொலைவு இடைவெளி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை கடந்த 2019ம் ஆண்டு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நீக்கியது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்திருந்தது. இந்த தடையை நீக்குமாறு கிரசர் உரிமையாளர்கள் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்க மறுத்து விட்ட தலைமை நீதிபதி அமர்வு, குவாரிகளின் அமைவிடம் குறித்து ஆராய்ந்து வரும் நீரி அமைப்பின் இறுதி அறிக்கையை 6 மாதங்களில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments