ஏடிஎம்மில் பணம் எடுக்க உதவி கேட்ட மூதாட்டியை ஏமாற்றி பணம் திருடிய மர்மநபர்

0 2910

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஏடிஎம்-ல் பணம் எடுக்க வந்த மூதாட்டியை ஏமாற்றி பண திருட்டில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டான்.

விருதுநகர் சாலையில் உள்ள ஏடிஎம்மிற்கு வந்த ஜெயலட்சுமி என்ற மூதாட்டி, அங்கிருந்த ஒருவரிடம் பணம் எடுத்து தருமாறு அவரது ஏடிஎம் கார்டை கொடுத்து, பின் நம்பரையும் கூறியுள்ளார். அதனை பயன்படுத்தி பணத்தை எடுத்து கொடுத்த அந்த நபர், மூதாட்டியிடம் வேறு ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்துவிட்டு, அவர் சென்றவுடன் அவரது கார்டு மூலம் 2800 ரூபாயை திருடியுள்ளான்.

அதன்பின் பணம் எடுக்கப்பட்டதாக செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்ததையடுத்து, ஜெயலட்சுமி அளித்த புகாரின் பேரில் யோகராஜ் என்பவனை கைது செய்த போலீசார், அவனிடம் இருந்து 5 ஏடிஎம் கார்டுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments