பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

0 2724
பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழகத்திற்கு வாரந்தோறும் கூடுதலாக 50லட்சம் டோஸ் தடுப்பூசிகளை ஒதுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், 12-ம் தேதி நடந்த முதற்கட்ட மெகா தடுப்பூசி முகாமில், 28லட்சம் பேருக்கும், 19-ந் தேதி நடந்த 2ஆம் கட்ட முகாமில் 16லட்சம் பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு இதுவரை 3கோடியே 97லட்சம் டோஸ் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அக்டோபர் 31-ந் தேதிக்குள் தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடும் வகையில், வாரந்தோறும் தமிழகத்துக்கு கூடுதலாக 50லட்சம் டோஸ் தடுப்பூசிகளை ஒதுக்குமாறு முதலமைச்சர் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments