குடிக்க பணம் தராததால் தாயை அரிவாள்மனையால் தாக்கி கொலை செய்த மகன்

0 2681

சென்னையில் மது அருந்த பணம் தராததால், அரிவாள்மனையால் தாக்கி தாயை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

வேளச்சேரியை சேர்ந்த லட்சுமியின் மகன் மூர்த்தி போதைக்கு அடிமையாகி இருந்ததால், மனைவி பிரிந்து சென்றுவிட்ட நிலையில், தாயுடன் வசித்து வந்துள்ளார். அப்போதும், மதுப்பழக்கத்தை விடாத மூர்த்தி, மது அருந்த பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளான். தாய் லட்சுமி பணம் தர மறுத்ததால், வீட்டில் காய்கறிகளை வெட்ட பயன்படுத்தும் அரிவாள்மனையை எடுத்து தாயை தாக்கி கொலை செய்துள்ளான்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வேளச்சேரி பிரதான சாலையில் ஆட்டோவில் தப்பிச் செல்வதற்காக காத்திருந்த மூர்த்தியை சுற்றி வளைத்து கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments