2022 பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலை மாநில தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தலைமையில் காங்கிரஸ் சந்திக்கும் - காங்.மேலிட பொறுப்பாளர் அறிவிப்பு

0 3231

2022 பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலை, மாநில தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் தலைமையில் காங்கிரஸ் கட்சி சந்திக்கும் என மேலிட பொறுப்பாளர் ஹரிஷ் ராவத் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் காங்கிரசில் ஏற்பட்ட பலத்த உட்கட்சி பூசலின் விளைவாக முதலமைச்சர் பதவியில் இருந்து அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். சித்து அந்த இடத்திற்கு வருவார் என கூறப்பட்ட நிலையில், புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி நியமிக்கப்பட்டார். இது பற்றி செய்தி நிறுவனத்திற்கு ஹரீஷ் ராவத் பேட்டி அளித்தார்.

அப்போது முன்னாள் கிரிக்கெட் வீரரான சித்துவை மிகவும் பிரபலமானவர் என வர்ணித்த அவர், வரும் தேர்தலில் அவரது தலைமையில் காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்திக்கும் என்றார். எனவே அந்த தேர்தலில் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைத்தால் சித்து முதலமைச்சராவார் என கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments