பேஸ்புக் இந்தியா கொள்கை இயக்குநராக முன்னாள் ஐஏஎஸ் நியமனம்

0 2022

தனது பொதுக்கொள்கை இயக்குநராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், ஊபர் முன்னாள் அதிகாரியுமான ராஜீவ் அகர்வாலை ஃபேஸ்புக் இந்தியா நியமித்துள்ளது.

ஃபேஸ்புக் பயனர்களின் பாதுகாப்பு, டேட்டா பாதுகாப்பு, தனிநபர் உரிமை மற்றும் இன்டர்நெட் நிர்வாகம் குறித்த கொள்கைகளை அவர் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஐஏஎஸ் அதிகாரியாக 26 ஆண்டுகள் இருந்த போது, அறிவுசார் சொத்துரிமை காப்பு குறித்த இந்தியாவின் முதலாவது தேசிய கொள்கையை  கொண்டு வந்தார்.

தனது அனுபவத்தின் மூலம்  ஃபேஸ்புக்கில் வெளிப்படைத் தன்மை, உத்தரவாதம் உள்ளிட்டவற்றை  மேலும் அதிகரிக்க அவர் உதவுவார் என பேஸ்புக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments