அடுத்த 24 மணி நேரத்திற்கு டெல்டா பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை மையம்

0 2307

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் டெல்டா உள்பட சில மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு டெல்டா பகுதிகள் மற்றும் திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழையும், கடலோரம் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். நாளைய தினம் வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம், ஈரோடு, நாமக்கலில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னையில் நகரின் சில பகுதிகளில் இரு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா சாலையில் 11 செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments