ஜம்மு காஷ்மீரின், ஊரி எல்லை அருகே தீவிரவாதிகள் நடமாட்டம்...பாதுகாப்புப் படையினர் குவிப்பு

0 1849

ஜம்மு காஷ்மீரின் ஊரி பகுதியில் தீவிரவாதிகளின் சந்தேகத்திற்குரிய நடமாட்டம் காரணமாக அப்பகுதியில் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

தீவிரவாதிகளைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமையன்று ஸ்ரீநகரில் ரோந்து சென்ற காவல் துறையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

காவலர்கள் திருப்பி சுட்டு பதிலடி கொடுத்ததால் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு தீவிரவாதிகள் தப்பிச் சென்றனர். இதனிடையே ஒரு தொழிலாளியை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்று சடலத்தை வீசிவிட்டுச் சென்றனர்.

தொடர்ந்து அப்பகுதியில் தீவிரவாதிகளின் அட்டகாசம் காணப்படுவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments