தமிழ்நாட்டில் ஒரே நாளில் 16 லட்சத்து 43 ஆயிரத்து 879 டோஸ் கொரோனா தடுப்பூசி

0 1613

தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 16 லட்சத்து 43 ஆயிரத்து 879 டோஸ்கள் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

தமிழ்நாட்டின் 46 முக்கிய நகரங்களில் சுமார் 20 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு நேற்று இலவசமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதில் சென்னையில் மட்டும் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

இதற்காக சென்னையின் பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கபட்டிருந்தன.பாதிப்பு அதிகமாக உள்ள கோவை, கரூர் போன்ற பகுதிகளிலும் முறையே ஒரு லட்சம் மற்றும் 92 ஆயிரம் டோஸ்கள் செலுத்தப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments