ஏழுமலையானை இலவசமாக தரிசிக்க அனைத்து மாநில மக்களுக்கும் அனுமதி

0 2957

அனைத்து மாநில மக்களும் இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தற்போது  புரட்டாசி மாதம் என்பதால்  ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கான இலவச தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கை இன்று முதல் தினமும் 8ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலவச தரிசன டிக்கெட்டுகள் தினந்தோறும் திருப்பதி பேருந்து நிலையம் எதிரே உள்ள தேவஸ்தான சீனிவாசன் பக்தர்கள் ஓய்வறையில் காலை 6 மணி முதல் வழங்கப்படும் என்றும் ஆதார் அட்டையை காண்பித்து டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments