குஜராத்தில் 3000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல்

0 2151

குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்தில் சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய 3 ஆயிரம் கிலோ ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

வருவாய்த்துறை உளவுப்பிரிவினர் சோதனை மேற்கொண்டபோது, ஆந்திர நிறுவனம் ஒன்றுக்கு ஆப்கானிஸ்தானில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட முகப்பவுடர் கண்டெய்னர்களில் ஹெராயின் பிடிபட்டது. 

இதுதொடர்பாக, சென்னையைச் சேர்ந்த கணவன் மனைவி என 2 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். டெல்லியைச் சேர்ந்த ஆப்கான் நாட்டவர் சிலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. தாலிபான்களின் தொடர்பு குறித்தும் அவர்களிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments