வாடிக்கையாளர் போல் நடித்து செல்போன்கள் திருடிய இளைஞன்...சிசிடிவி காட்சிகள்..!

0 2611

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட எஸ்.பி. அலுவலகம் எதிரே உள்ள செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து செல்போன்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாடிக்கையாளர் போல் நடித்த இருந்த இளைஞன், வேலையாள் அசந்த நேரம் செல்போன்களை தூக்கிக் கொண்டு ஓடி உள்ளான். சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரித்த நிலையில், மற்றொரு கடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 பேரையும் கடையாள்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து 2 இளைஞரிடம் விசாரித்து வரும் போலீசார் சம்பவத்தில் மேலும் ஒருவரை தேடி வருவதாக தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments