கர்நாடக அரசுப் போக்குவரத்து கழகங்களின் ஊழியர்கள் தர்ணா போராட்டம்...போக்குவரத்து சேவை பாதிப்பு

0 1896

கர்நாடக அரசுப் போக்குவரத்து கழக ஊழியர்கள் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுப்டடிருப்பதால் பேருந்து சேவை பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த போராட்டத்தின் போது விதிமுறைகளை மீறி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், ஏராளமான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு இருந்தார்கள்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காமல் பிடித்தம் செய்யப்பட்டது. இதையடுத்து, ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பணி நீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் வேலையில் சேர்க்க வேண்டும். ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட சம்பளத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 4 போக்குவரத்து கழகங்களின் ஊழியர்களின் கூட்டமைப்பு சார்பில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments