ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்த மூதாட்டி... மீட்ட சகபயணிகள்..!

0 2495

மகாராஷ்டிராவில், ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்த மூதாட்டி ஒருவர் நூலிழையில் உயிர்தப்பினார்.

மும்பையில் இருந்து ஐதராபாத்திற்கு கணவருடன் சென்ற அந்த மூதாட்டி வசை ரோடு (Vasai Road) ரயில்நிலையத்தில் தேநீர் அருந்த இறங்கினார். ரயில் புறப்பட்டதால் பதற்றமடைந்த அவர் வேகமாக ஏற முயன்றபோது, தண்டவாளத்திற்கும் ரயிலுக்கும் இடையே தடுமாறி விழுந்தார். சகபயணிகளும், போலீசாரும்விரைந்து சென்று அவரை மீட்டனர்.

பலத்த காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments