பீகார் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ஒடிசா இளைஞர் ; இளம்பெண் சத்தம் போட்டதால், கத்தியால் குத்தி கொலை செய்த கொடூரம்

0 3686
இளம்பெண் சத்தம் போட்டதால், கத்தியால் குத்தி கொலை செய்த கொடூரம்

கள்ளக்குறிச்சியில் பீகார் மாநில இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ஒடிசா மாநில இளைஞன், இளம்பெண் சத்தம் போட்டதால் அவரை கத்தியால் குத்தி கொலை செய்த நிலையில், கைது செய்யப்பட்டான். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணிக்காக வந்திருந்த அந்தப் பெண், காலை அவர் தங்கியிருந்த ஷெட்டிற்கு முன்பாக துணி துவைத்துக் கொண்டிருந்தார்.

அப்போது அருகிலுள்ள ஷெட்டில் தங்கியிருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கேசப்நாயக் என்பவன் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான். அந்த பெண் கத்திக் கூச்சலிட்டதால், அருகில் இருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்தி அவரை கொலை செய்துள்ளான். கொலையை அரங்கேற்றி விட்டு அதே இடத்தில் பதுங்கி இருந்த கேசப்நாயக்கை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments