பீகார் தம்பதியின் 3 வயது ஆண் குழந்தைக் கடத்தல் ; மத்தியப் பிரதேச இளைஞர்கள் கைது

0 1658
பீகார் தம்பதியின் 3 வயது ஆண் குழந்தைக் கடத்தல் ; மத்தியப் பிரதேச இளைஞர்கள் கைது

சென்னை அம்பத்தூர் எஸ்டேட்டில் இருந்து மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்ட பீகார் தம்பதியின் 3 வயது ஆண் குழந்தையை துரிதமாக செயல்பட்டு, 4 மணி நேரத்தில் போலீசார் மீட்டுள்ளனர்.

பீகாரைச் சேர்ந்த மிதிலேஷ் - மீராதேவி தம்பதி அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். சனிக்கிழமை இவர்களது 3 வயது இளைய மகன் ஷியாம் திடீரென மாயமாகியுள்ளான்.

புகாரின் பேரில் விசாரணையில் இறங்கிய போலீசார், மிதிலேஷ் தங்கியிருந்த வீட்டின் மேல் மாடியில் தங்கி இருந்த மத்திய பிரதேசத்தைச் சார்ந்த ஷிவ்குமார் நோரியா, மோனு கபரிதாஸ் ஆகியோர் குழந்தையை இரயிலில் கடத்திச் சென்றதைக் கண்டறிந்தனர்.

உடனடியாக இரயில்வே போலீசாருக்குத் தகவல் தெரிவித்த நிலையில், நாக்பூர் இரயில் நிலையத்தில் வைத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, குழந்தையும் மீட்கப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments