காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த சிறுவன் ரத்தக்காயங்களுடன் மீட்பு

0 1710
காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த சிறுவன் ரத்தக்காயங்களுடன் மீட்பு

சென்னை அடுத்த மதுரவாயிலில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த 9 வயது சிறுவன், ரத்தக் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

சீமாத்தம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த 4ஆம் வகுப்பு படித்து வரும் சிறுவன், ஆலப்பாக்கத்தில் உள்ள திரையரங்கு முன் சுண்டல் வியாபாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்றிரவு வெளியே சென்ற சிறுவன் காலை வரை வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில், மதுரவாயல் மேம்பாலத்தின் கீழ் தலையில் காயங்களுடன் மயங்கிய நிலையில் இருந்த சிறுவனை போலீசார் மீட்டனர். விசாரணையில் 9 வயது சிறுவனுடன் இருக்கும் இரண்டு 17 வயது சிறுவர்கள், கஞ்சா போதையில் ஓரினசேர்க்கைக்கு அழைத்ததும், அதற்கு 9 வயது சிறுவன் மறுத்ததால் சரமாரியாக தாக்கி விட்டு சென்றதும் தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக 17 வயது சிறுவன் ஒருவனை போலீசார் கைது செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments