இந்தியா வந்துள்ள சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சர் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை

0 2222
இந்தியா வந்துள்ள சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சர் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை

டெல்லிக்கு வந்துள்ள சவூதி அரேபிய இளவரசரும் வெளியுறவு அமைச்சருமான பைசல் பின் பர்கான் அல் சவுத், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் பேச்சு நடத்தியுள்ளார். மூன்று நாள் பயணமாக நேற்று டெல்லிக்கு வந்த சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இன்று அவர் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். ஆப்கன் அரசியல் நிலவரம் தொடர்பாகப் பயனுள்ள பேச்சு நடத்தியதாகவும், சவூதி அரேபியாவுக்கு இந்தியாவில் இருந்து நேரடி விமானப் போக்குவரத்தைத் தொடங்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சவூதி வெளியுறவு அமைச்சர் திங்களன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச உள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments