தமிழகத்தில் புதிதாக 1,697 பேருக்கு கொரோனா பாதிப்பு

0 2755
தமிழகத்தில் புதிதாக 1,697 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் புதிதாக 1,697 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாகக் சென்னையில் 232 பேரும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 215 பேரும், ஈரோடு மாவட்டத்தில் 131 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 114 பேரும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 103 பேரும், திருப்பூர் மாவட்டத்தில் 95 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கர்நாடகத்தில் இருந்து சாலை மார்க்கமாக வந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 1,594 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில் 27 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் தற்போது 16,969 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments