பானிப்பூரியுடன் கொடுக்கப்பட்ட உருளைக்கிழங்கில் புழுக்கள் ; வடமாநில இளைஞரை பிடித்து கட்டி வைத்த நாம் தமிழர் கட்சியினர்

0 2432
பானிப்பூரியுடன் கொடுக்கப்பட்ட உருளைக்கிழங்கில் புழுக்கள்

சென்னை அம்பத்தூர் அருகே பானிப்பூரியுடன் கொடுக்கப்பட்ட உருளைக்கிழங்கில் புழுக்கள் இருந்ததால், அதனை விற்பனை செய்த வடமாநில இளைஞரை பிடித்து கட்டி வைத்து நாம் தமிழர் கட்சியினர் போலீசில் ஒப்படைத்தனர்.

பட்டரவாக்கம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கொடி ஏற்றுவதற்காக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகையையொட்டி அப்பகுதியில் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் காத்திருந்தனர். அப்போது அவ்வழியாக தள்ளுவண்டியில் பானிபூரி விற்றுக் கொண்டு வந்த வடமாநில இளைஞரிடம் பானிபூரி வாங்கியுள்ளனர்.

பானிப்பூரியுடன் கொடுக்கப்பட்ட வேகவைக்கப்பட்ட உருளைக்கிழங்கில் துர்நாற்றம் வீசியதோடு அதில் புழுக்களும் காணப்பட்டுள்ளன. இதனால் ஆத்திரமடைந்த நாம் தமிழர் கட்சியினர் வடமாநில இளைஞரை கட்டிவைத்து, போலீசில் ஒப்படைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments