ஓடிக்கொண்டிருந்த லாரியில் திடீரென உயர்ந்த ஹைட்ராலிக் டிராலி.. உடைந்து விழுந்த தேவஸ்தான வரவேற்பு வளைவு.. திருப்பதியில் பரபரப்பு

0 4114
திருப்பதியில் டிப்பர் லாரியின் ஹைட்ராலிக் டிராலி மேலே உயர்ந்து மோதியதில் தேவஸ்தானம் சார்பில் வைத்திருந்த வரவேற்பு வளைவு உடைந்து விழுந்து பல வாகனங்கள் சேதமடைந்தன.

திருப்பதியில் டிப்பர் லாரியின் ஹைட்ராலிக் டிராலி மேலே உயர்ந்து மோதியதில் தேவஸ்தானம் சார்பில் வைத்திருந்த வரவேற்பு வளைவு உடைந்து விழுந்து பல வாகனங்கள் சேதமடைந்தன.

திருப்பதி பேருந்து நிலையம் அருகே டிப்பர் லாரி சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கவனக்குறைவால் லாரியின் பின்னால் இருந்த ஹைட்ராலிக் டிராலி மேலே உயர்ந்தது.

அந்த டிராலி வரவேற்பு வளைவு மீது மோதியதில் அது உடைந்து கீழே விழுந்தது. இதில் அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த கார் உட்படப் பல வாகனங்கள் சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக எவரும் காயமடையவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments