சென்னையில் 2 மனைவிகளுடன் சொகுசு வாழ்க்கை வாழ திருட்டு தொழில் செய்த நபர் மும்பையில் கைது

0 2286
இரண்டு மனைவிகளுடன் சொகுசு வாழ்க்கை வாழ திருட்டை தொழிலாக்கிக் கொண்ட நபரை சென்னை போலீசார் மும்பையில் வைத்து கைது செய்தனர்.

இரண்டு மனைவிகளுடன் சொகுசு வாழ்க்கை வாழ திருட்டை தொழிலாக்கிக் கொண்ட நபரை சென்னை போலீசார் மும்பையில் வைத்து கைது செய்தனர்.

கடந்த 13-ந் தேதி பூக்கடையைச் சேர்ந்த ராஜேந்திர குமாரின் கடையில் ஊழியர் மனோஜ் மட்டும் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர், தான் ராஜேந்திர குமாரின் நெருங்கிய நண்பர் எனக் கூறி டீ வாங்கி வரச்சொல்லியுள்ளார்.

அதனை நம்பிய மனோஜும்  டீ வாங்க செல்லவே, அந்த நேரம் பார்த்து கள்ளச்சாவி போட்டு கல்லாப்பெட்டியில் இருந்த 5லட்சம் ரூபாய் பணம், 200 கிராம் எடை கொண்ட இரண்டு தங்கக் கட்டிகளை திருடிச் சென்றுவிட்டார். சிசிடிவி மூலம் கொள்ளையில் ஈடுபட்ட நபர் பெங்களூரைச் சேர்ந்த முகமது சமீர் என்பதை தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர்.

ஒவ்வொரு முறை கொள்ளையடிக்கும் பணத்தை முகமது சமீர் மும்பையிலுள்ள முதல் மனைவிக்கும், பெங்களூருவிலுள்ள இரண்டாவது மனைவிக்கும் மாறிமாறி கொடுத்து வருபவர் என்பதும்,  கடைசியாக கொள்ளையடித்த பணத்தில் 6 லட்சம் ரூபாய்க்கு புதிய கார் ஒன்றும் 1 லட்சம் ரூபாய்க்கு விலை உயர்ந்த வாஷிங் மிஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை தனது இரு மனைவிகளின் வீட்டிற்கு வாங்கிக் கொடுத்து சொகுசு வாழ்க்கையை நடத்தி வந்தது தெரியவந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments