காதலியுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்த போது கால் தவறி கிணற்றில் விழுந்த இளைஞர் 10 மணி நேரத்திற்கு பின் மீட்பு

0 2418
காதலியுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்த போது கால் தவறி கிணற்றில் விழுந்த இளைஞர் 10 மணி நேரத்திற்கு பின் மீட்பு

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் நள்ளிரவில் காதலியுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்த இளைஞர் கிணற்றில் தவறி விழுந்து 10 மணி நேரத்திற்கு மேலாக தத்தளித்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்டனர்.

புதன் சந்தப்பேட்டை பகுதியில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஆஷிக் என்பவர் தங்கி வேலை பார்த்து வருகிறார். இரவு நேரத்தில் தனியார் நூற்பாலை அருகே உள்ள கிணற்று பகுதியில் நின்றுகொண்டு தனது காதலியுடன் பேசிக்கொண்டிருந்த போது கால் தவறி தண்ணீர் கிணற்றுக்குள் விழுந்தார்.

சுமார் 10 மணி நேரமாக கிணற்றுக்குள் தத்தளித்த நிலையில், காலையில் இளைஞரின் சத்தத்தை கேட்டு அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறுகட்டி அந்த இளைஞரை மேலே கொண்டு வந்தனர். இளைஞருக்கு கை முறிவு ஏற்பட்டதால் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு தீயணைப்பு துறையினர் அனுப்பி வைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments