சொகுசு விடுதியில் போதைப்பொருள் உட்கொண்டு அரைகுறை ஆடையுடன் நடனம் ; இளைஞர்கள், இளம்பெண்கள் உட்பட 28 பேர் கைது

0 36927
போதைப் பொருட்கள், கார்கள் உள்ளிட்டவை பறிமுதல்

பெங்களூரு அருகே தனியார் ரிசார்ட்டில் போதை மருந்தை உட்கொண்டு அரகுறை ஆடையோடு நடனமாடிய இளம்பெண்கள் உட்பட 28 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆனேக்கல் பகுதியிலுள்ள அந்த ரிசார்ட்டுக்கு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர்கள், பெண்கள், கல்லூரி மாணவர்கள் என 40 பேர் கொண்ட கும்பல் சென்றுள்ளது. 5க்கும் மேற்பட்ட சொகுசுக் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்ற அவர்கள், போதை மாத்திரைகளை உட்கொண்டு வண்ணமயமான மின்விளக்கு அலங்காரங்களுக்கு மத்தியில் நடன நிகழ்ச்சி நடத்தியுள்ளனர்.

தகவலறிந்து போலீசார் அங்கு சென்ற நிலையில், அவர்களைப் பார்த்த இளம்பெண்களும் இளைஞர்களும் திசைக்கு ஒருவராக தலைதெறிக்க ஓடியுள்ளனர். அவர்களில் 28 பேரை கைது செய்த போலீசார், மற்றவர்களைத் தேடி வருகின்றனர். கைதானவர்களிடமிருந்து அவர்களுடைய வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments