தன்னைப் பதவியில் இருந்து நீக்கியது பஞ்சாபின் சூழலைப் புரிந்துகொள்ளாமல் எடுக்கப்பட்ட முடிவு என அமரீந்தர் சிங் கருத்து

0 2146
முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுமுன் சோனியாகாந்திக்கு அமரீந்தர் சிங் எழுதிய கடிதத்தில், தன்னைப் பதவியில் இருந்து நீக்குவது பஞ்சாபின் சூழலை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் எடுக்கப்பட்ட நடவடிக்கை எனக் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரசுக்கும் பஞ்சாபுக்கும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட துன்பம் இருந்தாலும், இந்த முடிவால் மாநிலத்தின் அமைதிக்கும் வளர்ச்சிக்கும் எந்தப் பாதிப்பும் இருக்காது என்றும், கடந்த சில ஆண்டுகளாகச் செய்து வந்த பணிகள் தடையின்றித் தொடரும் என்றும், அனைவருக்கும் நீதி உறுதி செய்யப்படும் எனவும் நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். தனது நாலரை ஆண்டுக்கால ஆட்சியில் செய்த சாதனைகளையும் அமரீந்தர் சிங் பட்டியலிட்டுள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments