சீனாவில் ஆற்றில் பயணிகள் படகு கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழப்பு

0 1737

சீனாவின் குயிச்சோ (Guizhou) மாகாணத்தில் பயணிகள் படகு ஆற்றில் கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர்.

ஜாங்கி (Zangke) ஆற்றில் 46 பயணிகளை ஏற்றி சென்ற படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஆற்றில் தத்தளித்த 39 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

ஆற்றில் மாயமான 7 பேரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 40 பேர் பயணிக்க கூடிய படகில் 46 பேர் பயணித்ததால் விபத்து நேர்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments