ஊரக உள்ளாட்சித் தேர்தல் - மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கீடு

0 2266
9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

வேலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, காஞ்சிபுரம், தென்காசி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ள கமல்ஹாசன், உள்ளாட்சி அமைப்புகளை வலுவாக்கி மக்கள் பங்கேற்பை உறுதி செய்ய மக்கள் நீதி மய்யம் முனைப்புடன் செயல்படும் என கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments