திடீரென வெடித்த பின்பக்க டயர்... கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்து கோயிலுக்குள் புகுந்த கார்..!

0 2512

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த கார் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்து கோயிலுக்குள் புகுந்தது.

கரையான்சாவடி டிரங்க் சாலையில் பாலகுமார் என்பவர் ஓட்டி வந்த காரின் பின்பக்க டயர் வெடித்ததில், கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் மோதியவாறு  சிறிய கோவிலுக்குள் புகுந்தது. இதில் கோயிலுக்குள் படுத்திருந்த ராஜேஷ் என்பவர் காயமடைந்தார். 

காரை இன்னும் வேகமாக இயக்கி இருந்தால் அருகிலிருந்த குடியிருப்புகளில் புகுந்து விபத்து ஏற்படுத்தி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments