மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான பண மோசடி வழக்கில் ரூ. 4.7 கோடி பெற்றதைச் சான்றுகள் காட்டுவதாக நீதிபதி கருத்து

0 1589
மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், காவல்துறையைச் சேர்ந்த சச்சின் வாசியிடம் இருந்து 4 கோடியே 70 இலட்ச ரூபாயைப் பெற்றுக் கொண்டதைச் சான்றுகள் காட்டுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், காவல்துறையைச் சேர்ந்த சச்சின் வாசியிடம் இருந்து 4 கோடியே 70 இலட்ச ரூபாயைப் பெற்றுக் கொண்டதைச் சான்றுகள் காட்டுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அனில் தேஷ்முக் உள்துறை அமைச்சராக இருந்தபோது, உணவகங்கள், குடி விடுதிகளில் இருந்து மாதந்தோறும் தனக்குப் பெருந்தொகைப் பணம் திரட்டித் தரும்படி சச்சின் வாசி உள்ளிட்ட காவல்அதிகாரிகளிடம் கூறியதாக மும்பை முன்னாள் காவல் ஆணையர் குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பான வழக்கில் மும்பை நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதை ஆய்வு செய்த நீதிபதி தேஷ்பாண்டே, சச்சின் வாசியிடம் அனில் தேஷ்முக் பணம் பெற்றுக்கொண்டதைச் சான்றுகள் காட்டுவதாகத் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments