தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 11234

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி, வெப்பச்சலனத்தால் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் மாவட்டங்களில் இன்று மிகக் கனமழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, மதுரை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கன மழையும், பிற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. நாளை புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கன மழையும், பிற கடலோர மாவட்டங்கள் அவற்றையொட்டிய ஒட்டிய உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

செப்டம்பர் 21, 22, 23 ஆகிய நாட்களில் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments