குடும்பமே நாசாமா போயிடும்.. திடீரென நடுரோட்டில் உருண்டு, புரண்டு போலீசாரை நோக்கி சாபமிட்ட சாமியார்..

0 47248
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு சுற்றுலா வந்த நபர், போலீசார் அனுமதிக்காததால், நடுரோட்டில் உருண்டு, புரண்டு சாபமிட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு சுற்றுலா வந்த நபர், போலீசார் அனுமதிக்காததால், நடுரோட்டில் உருண்டு, புரண்டு சாபமிட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

கொரோனா காரணமாக ஒகேனக்கலுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகளை பென்னாகரம் அடுத்த மடம் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், ஒகேனக்கலில் உள்ள காவேரியம்மன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த நபர் ஒருவர் தாம் ஒரு சாமியார் எனவும், உள்ளூர்வாசி எனவும் கூறி உள்ளே செல்ல அனுமதி கேட்டுள்ளார். அவரை போலீசார் அனுமதிக்காததால், நடுரோட்டில் உருண்டு புரண்ட அந்த நபர், உங்கள் குடும்பமே நாசாமா போயிடும் என போலீசாரை நோக்கி சாபமிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments