டேனியல் கிரேக் நடிப்பில் வெளியாகும் கடைசி ஜேம்ஸ் பாண்ட் படம்... உருக்கமாக பேசி விடைபெற்ற டேனியல் கிரேக்

0 3088

ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் தான் கடைசியாக நடிக்கும் நோ டைம் டு டை படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பில், நாயகன் டேனியல் கிரெய்க் படக்குழுவினருடன் உருக்கமாகப் பேசி விடைபெறும் வீடியோ வெளியாகி உள்ளது.

2006 ஆம் ஆண்டு வெளியான கேசினோ ராயல், ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் டேனியல் கிரேக் நடித்த முதல்படம். அவரது நடிப்பில் இதுவரை 4 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வெளியாகி உள்ள நிலையில், ஐந்தாவதாக நோ டைம் டு டை படத்தை டேனியல் கிரேக் நடித்து முடித்துள்ளார்.

டேனியல் கிரேக் ஜேம்ஸ் பாண்டாக நடிக்கும் கடைசி படமான நோ டைம் டு டை, வரும் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments