வாகனத்தை உதைத்து தள்ளி பெண்களிடம் நகை பறிப்பு... இளைஞன் கைது

0 3272

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வாகனத்தை உதைத்து தள்ளி விட்டு பெண்கள் அணிந்திருந்த தங்க நகைகளை பறித்த இளைஞன் கைது செய்யப்பட்டான்.

கடந்த சில மாதங்களாக திருமங்கலம், வாகைகுளம் ,பெரிய கட்டளை உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளில் தனியாக இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்களிடம் நகைகளை வழிப்பறி செய்யும் குற்றச்செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

இதனை அடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் ராஜ்குமார் என்ற இளைஞனை கைது செய்தனர். அவனிடம் இருந்து 13சவரன் நகைகள் மீட்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments