தமிழ்நாட்டில் தொடங்கியது 2வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்..!

0 2584
தமிழ்நாட்டில் தொடங்கியது 2வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்..!

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கொரோனா தடுப்பூசி செலுத்தி செல்கின்றனர்.

கோவை மாவட்டத்தில் மொத்தம் 706 இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். ஏற்கனவே நடத்தப்பட்ட மெகா தடுப்பூசி முகாம் மூலம், தமிழகத்தில் முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 58 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

 சென்னை முழுவதும் 200 வார்டுகளில் 1600 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் தொடக்கி வைத்தார். தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 இதேப்போல், மதுரை மாவட்டத்தில் 1500 இடங்களிலும், சேலம் மாநகராட்சி பகுதிகளில் 128 இடங்களிலும், கரூர் மாவட்டத்தில் 624 இடங்களிலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 750 இடங்களிலும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகம் முழுவதும் மாலை 7 மணி வரை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments