ஆஸ்திரேலியாவை மிரட்டிய சீனா... ஏவுகணைகளை சோதித்து சீனாவுக்கு அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை

0 9836

ஆஸ்திரேலியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படலாம் என்று மிரட்டிய சீனாவை எச்சரிக்கும் விதமாக அமெரிக்கா அணுசக்தி ஏவுகணைகளை சோதனை நடத்தியுள்ளது.

பிரான்ஸ் உடன் செய்த ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளுடன் இணைந்து அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கப் போவதாக ஆஸ்திரேலியா அறிவித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள சீனா, ஆஸ்திரேலியா மீது அணுசக்தி தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாக மிரட்டி இருந்தது.

சீனாவை எச்சரிக்கும் வகையில், யுஎஸ்எஸ் வயோமிங் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து அணு ஆயுதத்தைச் சுமந்து செல்லத்தக்க இரு பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை அமெரிக்கா வெற்றிகரமாக பரிசோதனை நடத்தியது. தேவையென்றால் இந்த ஏவுகணைகளின் தாக்குதல் தூரத்தை நீட்டிகொள்ளவும் முடியும் என்பது குறிப்பிடத்க்ககது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments