கடலூரில் பிரபல ரவுடியின் மனைவி ஓட ஓட வெட்டிக் கொலை

0 7725

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் அருகே என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்ட ரவுடியின் மனைவி ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 

திருப்பாதிரிப்புலியூர் குப்பங்குளத்தை சேர்ந்த கிருஷ்ணன், ரவுடி வீரா என்பவனை கொலை செய்த வழக்கில் போலீசார் பிடித்த போது தாக்குதல் நடத்தியதால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த நிலையில் கிருஷ்ணன் மனைவி காந்திமதி நேற்று இரவு கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த போது 3பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டது.

இதில் காந்திமதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தவறான தொடர்பு விவகாரத்தில் காந்திமதி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments