ஊராட்சி மன்றத் தலைவர் பதவி 13 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டதாகத் தகவல்... கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை

0 2392

விழுப்புரம் மாவட்டத்தில் ஊராட்சித் தலைவர் பதவியை ஏலம் விடுவது, பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

செஞ்சி அருகே உள்ள பொண்ணாங்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி 13 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் நிகழ்விடத்தில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம்  விடப்பட்டுள்ளதாக தகவல் வந்திருப்பதாகவும் இது தொடர்பாக காவல்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments