தனது பெயரைப் பயன்படுத்தி கூட்டம் நடத்த தடை கேட்டு நடிகர் விஜய் வழக்கு..!

0 7910

தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்த தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா உள்ளிட்ட தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடைவிதிக்க கோரி நடிகர் விஜய்
சென்னை உரிமை இயல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு வரும் 27ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட கட்சித் தலைவராக விஜயின் உறவினர் பத்மநாபன், பொதுச் செயலாளராக எஸ்.ஏ. சந்திரசேகர், பொருளாளராக தாயார் ஷோபா ஆகியோரது பெயர்கள் அறிவிக்கப்பட்டன.

ஆனால் இதற்கு விஜய் தரப்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தனது பெயரைப் பயன்படுத்தி கூட்டங்கள் நடத்த தடை கோரி நடிகர் விஜய் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சந்திரசேகர், ஷோபா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் விஜய் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகாததால் வழக்கை 27ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments