அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்தில் பயன்படுத்த 115 நாடுகளில் ஓடும் நதிகள் மற்றும் கடல்களில் இருந்து நீர் வரவழைப்பு

0 5406

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைய உள்ள ராமர் கோவில் கட்டுமானத்தில் பயன்படுத்த 115 நாடுகளில் ஓடும் நதிகள் மற்றும் கடல்களில் இருந்து  நீர் வரவழைக்கப்பட்டுள்ளது. 

''உலகமே ஒரு குடும்பம் என்பதை உணர்த்தும் வகையில் இது அமைந்து உள்ளது,'' என, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார். சிறிய குடுவைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்த நீர், ராஜ்நாத் சிங்கிடம் டில்லியில் நேற்று ஒப்படைக்கப்பட்டது. 

ராமர் பட்டாபிஷேகம் நடந்தபோது உலகின் பல கடல்களில் இருந்து நீர் வரவழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இப்பணி இப்போது மேற்கொள்ளப்படுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments