பெண்ணுக்கு கொடுமை.. குடிகார கணவன் எஸ்கேப்..! சிறுமிகள் எடுத்த வீடியோவால் எப்.ஐ.ஆர்

0 3529
பெண்ணுக்கு கொடுமை.. குடிகார கணவன் எஸ்கேப்..! சிறுமிகள் எடுத்த வீடியோவால் எப்.ஐ.ஆர்

கன்னியாகுமரி அருகே மது விருந்தில் ஏற்பட்ட தகராறில் கூட்டாளியுடன் சேர்ந்து மகள்களின் முன்னிலையில் மனைவியை அடித்து துன்புறுத்திய கணவனின் விபரீத வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகள்கள் எடுத்த வீடியோவால் போலீசுக்கு பயந்து வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தோடு தலைமறைவான குடிகார குடும்பஸ்தர் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

கன்னியாகுமரி மாவட்டம் வாழ்வச்சகோஷ்டம் பகுதியை சேர்ந்த சுஜின் என்பவர் இரு தினங்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு நண்பர்களையும், உறவினர்களையும் அழைத்து வந்து மதுவுடன் கறி விருந்து வைத்துள்ளர். போதையில் எல்லை மீறிய நண்பர்களை சுஜின் மனைவி கிரிஜா கண்டித்ததாக கூறப்படுகின்றது. மதுகுடிக்க நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வந்த கணவனையும் திட்டியுள்ளார். ஆத்திர மடைந்த கணவர் குடிகார நண்பர்களுடன் சேர்ந்து மனைவி கிரிஜாவை தாக்கியதால் இருவருக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

கணவரிடம் அடிவாங்கினாலும், அவரது குடிகார கூட்டாளியின் சட்டையை விடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டு வாக்குவாதம் செய்து கொண்டிருந்த மனைவியை மீண்டும் கம்பால் தாக்கி விரட்டினார் கணவர் சுஜின்...

தங்கள் தாய்க்கு நடக்கின்ற கொடுமைகளை கண்டு கொதித்து போன அவரது மகள்கள் இந்த சம்பவங்களை எல்லாம் செல்போன் காமிராவில் பதிவு செய்ததோடு, தங்கள் தாயை அடித்தால் அத்தனை பேரும் உள்ளே போக வேண்டிருக்கும் என்றும் எச்சரித்தனர்

இருந்தாலும் போதையில் என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் கிரிஜாவை , விவாகரத்து செய்வதாக கூறி சுஜின் அடித்து விரட்டிய நிலையில் தனக்கான நியாத்தை கேட்டு அழுதபடியே கிரிஜா கணவரிடம் நின்று கொண்டிருந்தார். அவரது நண்பர் செல்போனை பறிக்க முயன்றார் நடக்கவில்லை...

இந்த கொடுமையான தாக்குதல் சம்பவம் தொடர்பாக மகள்கள் எடுத்த வீடியோ காவல்துறையினரின் பார்வைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் கிரிஜாவை அடித்து துன்புறுத்திய சுஜின் மற்றும் நண்பர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

மறு நாள் போதை தெளிந்த நிலையில் தான் செய்த தவறுக்கு மன்னிப்புக்கேட்ட சுஜின் , தன் மீதான புகாரை வாபஸ் வாங்கும் படி மனைவியிடம் கதறியுள்ளான். புகாரே அளிக்காத மனைவி என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்க, இது சிறுமிகளின் கண்ணுக்கு எதிரே தாய்க்கு நடந்த கொடுமை என்பதால் வீடியோ அடிப்படையில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

இதையடுத்து போலீஸ் கைது செய்து விடும் என்று அஞ்சிய சுஜின் தனது வீட்டைபூட்டிவிட்டு தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு தலைமறைவானதாக கூறப்படுகின்றது. அதே நேரத்தில் பல குடும்பங்களின் நிம்மதியை கெடுத்து வரும் குடி சுஜினை குடும்பத்தோடு ஓட விட்டிருக்கின்றது ..! என்கின்றனர் அவரது உறவினர்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments