தமிழகத்தில் நாளை மெகா தடுப்பூசி முகாம்.. ஒரே நாளில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டம்..!

0 2593

தமிழ்நாட்டில் நாளை மெகா தடுப்பூசி முகாம் மூலம் 15 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம் மூலம் 28 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதே போன்ற தீவிர தடுப்பூசி முகாம்களை வாரா வாரம் நடத்துமாறு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டார். இதையடுத்து நாளை சென்னையில் 1,600 முகாம்கள் உள்பட தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் தடுப்பூசி மூகாம்கள் மூலம் மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ஏதேனும் பின் விளைவுகள் நேர்ந்தால் அதற்கு சிகிச்சை அளிக்க தடுப்பூசி மையங்களில் பிரத்யேக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments