எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கத்துக்குச் சுற்றுச்சூழல் அனுமதி நிறுத்திவைப்பு

0 1665

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியைத் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு 6 மாதக் காலத்துக்கு நிறுத்தி வைத்துள்ளது.

வழக்கை விசாரித்த தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பில், 2 மாதத்திற்குள் பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி மத்தியச் சுற்றுச்சூழல் துறையின் அனுமதியைப் பெறுவதற்காக அனுப்பி வைக்கவும், 6 மாதத்துக்குள் மீண்டும் அனுமதியைப் பெறவும் உத்தரவிட்டது.

அதுவரை சுற்றுச்சூழல் அனுமதியை நிறுத்தி வைத்துள்ள அதேநேரத்தில் விரிவாக்கக் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளலாம் என்றும், சுற்றுச்சூழல் அனுமதி பெறும் வரை மின்னுற்பத்திக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்தனர்.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments