குடிபோதையில் டிரைவிங்.. குட்டையில் கார் கவிழ்ந்ததில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு..!

0 4435

மதுரை மாவட்டத்தில், குடி போதையில் ஓட்டியதாக கூறப்படும் கார் குட்டையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.

செல்லூரைச் சேர்ந்த 5 இளைஞர்கள், அலங்காநல்லூரில் உள்ள முல்லைப் பெரியாறு பாசன கால்வாயில் குளித்துவிட்டு மதுரை நோக்கித் திரும்பினர். அச்சம்பட்டியில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த குட்டையில் கவிழ்ந்தது.

நீரில் மூழ்கித் தத்தளித்த இளைஞர்களை அங்கிருந்தவர்கள் கார் கண்ணாடியை உடைத்து மீட்டனர்.

அரவிந்த், சித்திக் என்ற இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மற்ற மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீஸ் விசாரணையில் குடிபோதையில் காரை ஒட்டியது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments